#BREAKING: சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீஃப் பிரியாணிக்கு அனுமதி!

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அரசு அனுமதி.

சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திருவிழாவானது, 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சிக்கன் மட்டன் பிரியாணிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பீஃப் பிரியாணிக்கு அரங்கு இல்லையே ? என கேள்விகள் எழுப்பப்பட்டது.

பீஃப் பிரியாணிக்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் பீப் அரங்கு அமைக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். சென்னை பீஃப் பிரியாணிக்கு தனி அரங்கு அமைக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீஃப் பிரியாணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது. 3 பீப் பிரியாணி கடைகள் கேட்டுக் கொண்டதால் அனுமதி என தகவல் கூறப்படுகிறது.

அரங்கு அமைக்க விருப்பம் தெரிவித்தால், பீஃப் உணவு விற்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூரிய நிலையில், பீஃப்  பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை உணவு திருவிழாவுக்கு சென்று பீப் பிரியாணி விற்பனையை பார்வையிட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment