#BREAKING: அர்ஜுனா விருது – பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!

தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை.

அர்ஜுனா விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பிரக்ஞானந்தாவின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சமீபத்தில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார். இதுபோன்று அர்ஜுனா விருதுக்கு செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது அர்ஜுனா விருதாகும். பக்தி குல்கர்னிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டால் அந்த விருதை பெறும் முதல் செஸ் வீராங்கனை என்ற பெருமையை பெறுவார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment