#BREAKING: பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு – முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது ஐக்கிய ஜனதா தளம் கட்சி.

பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் கட்சியுடன் சேர்ந்து பீகாரில் மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த தேர்தலுக்கு பிறகு தேஜஸ்வி யாதவிற்கு முதலமைச்சர் பதவி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நடைபெற்ற ஜேடியூ கூட்டத்தில், கட்சியின் அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இருப்பதாக தெரிவித்தனர். நிதிஷ் குமார்  என்ன முடிவெடுத்தாலும் தாங்கள் எப்போதும் அவருடன் இருப்போம் என்று கூறியுள்ளனர். இதனிடையே, 2024 மக்களவை தேர்தலில் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment