#BREAKING: அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!

அதிமுகவின் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழப்பு.

சென்னையை அடுத்து மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், உள்ள அதிமுக கொடிக் கம்பத்தை கழற்றி மாட்டும் போது, கம்பம் தவறி விழுந்ததில் அதிமுகவைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் உயிரிழந்தார். மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் ஏற்றி வைக்கப்பட்டது.

இந்த 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றியபோது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், 100 அடி உயர கம்பத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment