#BREAKING: நோவாவேக்ஸ் சோதனையில் சிறார்களுக்கு அனுமதி!

சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் சிறார்கள் பங்கேறக் மத்திய அரசு அனுமதி.

இந்தியாவின் சீரம் நிறுவனம் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தில் நடத்தும் பரிசோதனையில் 7 முதல் 11 வயது சிறார் பங்கேறக் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மருந்து பரிசோதனைக்கான விதிகளின்படி பரிசோதனையில் சிறார்கள் பங்கேற்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவாவேக்ஸ் என்ற பெயரில் சிறாருக்கான கொரோனா மறந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்