#BREAKING: ஆதார் – மின் இணைப்பு அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜனவரி 31-ஆம் தேதி ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம் என அறிவித்துள்ளார். ஜனவரி 31க்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பகுதிவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, நாளை மறுநாள் முதல் ஜனவரி 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும், கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்றுள்ளார்.

தினசரி 3 முதல் 4 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதுவரை 1.60 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment