#BREAKING: 11 பேர் விடுதலை – பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி!

11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது தொடர்பாக பில்கிஸ் பானுவின் மறு சீராய்வு மனு தள்ளுபடி.

குஜராத் கலவர வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  கூட்டுபலாத்காரம் வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிராக தொடர்ந்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

அதன்படி, 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது தொடர்பாக பில்கிஸ் பானு தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் உள்ளது என கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த மறு சீராய்வு மனு தற்போது தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலம் முடியும் முன்பே குஜராத் அரசு விடுவித்ததை பில்கிஸ் பானு எதிர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment