பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை உடனடியாக அனுமதிக்க வேண்டும் – ப.சிதம்பரம் ட்வீட்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்.

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்தை அடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. விரைவில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி 3 மாதங்களில் செயல் திறன் இழக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி முடித்த 3 மாதங்களில் அதன் வீரியம் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது.

இதே தடுப்பூசிதான் இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்குகிறது. தற்போது, இந்த தடுப்பூசியின் திறன் 3 மாதங்களில் அதன் வீரியம் குறைந்து விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கோவிஷீல்டு தடுப்பூசி 3 மாதங்களுக்கு மட்டுமே பலன் தரும் என லான்செட் மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ள நிலையில், எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் பூஸ்டர்’ தடுப்பூசிகள் இன்றியமையாதது என்று முடிவு செய்ய போதுமான ஆராய்ச்சி, அறிஞர்களின் ஆதாரங்கள் உள்ளன உணவு கூறியுள்ளார். ‘பூஸ்டர்’ தடுப்பூசிகளை அனுமதிக்கும் நேரம் தற்போது வந்துவிட்டது.

பைசர் மற்றும் மாடர்னா போன்ற அங்கீகரிக்கப்பட்ட பிற தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிக்கும் தருணம் இது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் (பாதுகாப்புவாதம்) பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கான அதன் தவறான ஆர்வத்தில், தடுப்பூசி போடப்பட்ட மில்லியன் கணக்கான இந்தியர்களை அரசாங்கம் தொற்றுநோய்க்கு ஆளாக்குகிறது.

ஒருவேளை மூன்றாவது அலை வந்து, ஏற்கனவே தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டால், அதற்கான முழு பொறுப்பையும் மத்திய அரசு ஏற்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்