தமிழ் திரைப்படங்களை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறனின் முதல் படம்! விரைவில் திரையில்!

  • தமிழ் சினிமா விமசகர்களில் தனது விமர்சனம் மூலம் தெரிந்த முகமாகியிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். 
  • இவர் தனது இயக்கத்தில் முதல் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். 

தமிழ் திரைப்பட விமர்சகர்கள் மூலம் இணையதளவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறன். இவரது நெகடிவான விமர்சனத்தை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பர்.

தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தான் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை. விரைவில் இப்படம் பற்றிய அடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.