உருப்படாத ரசிகர்கள் வாய் திறக்காத காட்டன் வீரன்! கார்த்தியை சீண்டும் ப்ளூ சட்டை மாறன்!

நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் படம் வெளியானது. படத்தை பார்த்த மக்கள் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். ஓர் அளவிற்கு படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வழக்கமாக படங்கள் மற்றும் நடிகர்களை கலாய்த்து வரும் ப்ளூ சட்டை மாறன் இன்று கார்த்தியை விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார்.

குறிப்பாக ஜப்பான் படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்த நடிகர் கார்த்தி “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுமக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுகிறேன் என்னவென்றால், ஜப்பான் படத்தை ஸ்பாய்லர் செய்யவேண்டாம்” என்று கூறியிருந்தார். கார்த்தி பேசியதை குறிப்பிட்டு ” இதுக்கு..ஸ்பாய்லர் வேறயா” என ப்ளூ சட்டை கூறிஉள்ளார்.

அதைப்போல, மற்றோரு பதிவில் “மொக்கை சீனுக்கும், நடிப்பிற்கும் கூட ‘செட்டப்’ செய்யப்பட்ட ரசிகர்கள் கைதட்டும் தியேட்டர்களில் மட்டும்தான் இந்த ஹீரோக்கள் FDFS (முதல் நாள் முதல் காட்சிகளை) பார்ப்பார்கள். அதற்கு உதாரணம்: காசி, கோயம்பேடு ரோகிணி, குரோம்பேட்டை வெற்றி.

ஜப்பான் படம் பார்க்க வந்த கார்த்திக்கு உற்சாக வரவேற்பு!

மல்டிப்ளக்ஸ்ளில்.. செட்டப் கோஷ்டிகளை அழைத்து செல்லாமல்..பொதுமக்களுடன் படம் பார்த்தால்.‌.இந்தளவிற்கு கைத்தட்டல், விசில் சத்தம் வராது” என்பது போல கூறியுள்ளார். மற்றோரு பதிவில் கார்த்தி ரசிகர் ஒருவர் இன்று ஜப்பான் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அவருடைய மிகப்பெரிய கட் அவுட்டிற்கு மேல் ஏறி பால் அபிஷேகம் செய்தார்.

இது பற்றியும் ப்ளூ சட்டை மாறன் காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது ”  உருப்படாத ரசிகர்கள். வாய் திறக்காத காட்டன் வீரன். இப்படியான முட்டாள்தனமான செயல்களை காசி தியேட்டர் அனுமதிப்பது கேவலம். காவல்துறை இந்த தியேட்டர் நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இப்படியான பாலாபிஷேக குரங்குத்தனங்களை தடை செய்ய வேண்டும் “என பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.