japan - karthi

ஜப்பான் படம் பார்க்க வந்த கார்த்திக்கு உற்சாக வரவேற்பு!

By

கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி படம் பார்க்க சென்னையில் உள்ள காசி திரையரங்கிற்கு சென்றார்.

   
   

அங்கு குவிந்த ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்துள்னர். மேலும், கார்த்தியை சுற்றி இருந்து ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி முழக்கமிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முறை 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 3 படங்களில் எந்த படம் அதிகமாக ஓப்பனிங்கில் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜப்பான்

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் சுனில், அணு இமானு வேல் என பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

Dinasuvadu Media @2023