அரேபியாவில் கொடூரம்!! முதியவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி..,

ஓமன் நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயதுப் பெண்ணை கடந்த மே மாதம் திருமணம் செய்துக் கொண்டார். பின் நாடு திரும்பிய அவர் அந்தப் பெண்ணுக்கு விசாவை அனுப்பி வைத்தார். அந்தப் பெண்ணும் மஸ்காட் சென்று அவருடன் வாழத் தொடங்கினார் அதன் பின் அந்தப் பெண் தன் கணவர் தன்னை உடலாலும், மனதளவிலும் மிகவும் துன்புறுத்துவதாக இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணின் தாயார், தன் மகளை ரூ. 5 லட்சத்துக்கு விற்று விட்டதாக தன் கணவர், தனது சகோதரி கவுசியா பேகம், மற்றும் மைத்துனர் சிக்கந்தர் மீது போலீசில் புகார் அளித்தார். விசாரித்ததில் அவர்கள் அந்தப் பெண்ணுக்காக வாங்கிய பணத்தில் கல்யாண தரகருக்கு கொடுத்தது போக பாக்கியை, தாங்களும், திருமணம் நடத்தி வைத்த இஸ்லாமிய குருவும் பங்கு பிரித்துக் கொண்டதாக கூறி உள்ளனர்.
போலீசார் இந்திய தூதரகம் மூலம் அந்த ஓமன் முதியவரை தொடர்பு கொண்டனர். அவர் அந்தப் பெண்ணை திருப்பி அனுப்ப தயாராக உள்ளதாகவும் ஆனால் தான் செலவழித்த ரூ. 5 லட்சத்தை அந்த குடும்பத்தினர் திருப்பித் தரவேண்டும் எனவும் சொல்லி உள்ளார். தூதரக அதிகாரிகள் அவரை சமாதானப் படுத்தி பெண்ணை திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை விலைக்கு வாங்கிய குற்றத்துக்காக போடப்பட்டுள்ள வழக்கையொட்டி அந்த முதியவரை இந்தியாவுக்கு அழைத்து வர ஓமன் அரசை நாடியுள்ளனர்.
கடந்த வாரம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி இதில் தாம் உதவுவதாகவும் மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடமும் இது குறித்து உதவி கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
author avatar
Castro Murugan

Leave a Comment