“தரமணி”-பெண்ணின் மனவலி…!

0
151

ராம் வின் “தரமணி ” திரைப்படம் சென்னை தரமணியைச் சுற்றிய பிரச்சினைகளோடு, நவீனகாலப் பெண்களின் பாலியல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை தோலுரித்துக் காட்டுகிறது .. தற்காலத்திலும் கூட திருமணமான ஆணோ ,பெண்ணோ மற்றொரு நபர் உடன் (ஓரினச்சேர்க்கை உட்பட )உறவு கொண்டிருப்பதை தெரியும் பட்சத்தில் விபரீதமான முடிவிற்கு செல்வார்கள் என்பதை இதற்கு முன்னெடுத்த பிற்ப்போக்குத் திரைப்படங்கள் அனைத்தும் நிதர்சனம்.ஆனால் அதற்கான கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கு நாம் தவறுவதை இப்படத்தில் நம் கன்னத்தில் அறைந்தார் போல் காட்சிகளை தெளிவாக காட்டியுள்ளார்…. தன்னுடன் உடல் ரீதியாகவும் ,மன ரீதியாகவும் வாழ விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்தும் கேடுகெட்ட ஆணாதிக்கத்தனமாகத்தான் என்றும் நிலவுகிறது .இதற்கு உதாரணமாக உச்சநீதிமன்ற “கணவன்-மனைவி உடலுறவு கட்டாயம் .விருப்பம் அவசியமில்லை “என்ற பிற்ப்போக்கான தீர்ப்பு…தன் காதலன் என்ற நெருக்கமான உறவு நம்பிக்கையின் அடித்தளம்.ஆனால் அதில் பகிரப்பட்ட அந்தரங்க பேச்சுகள்,கடவு சொல் உட்பட பெண் அடிமைத்தனத்தினூடே கொண்டு செல்கிறது .உறவுகளில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அதை அணுகும் முறையிலிருந்து நாம் என்றுமே விலகியே இருக்கிறோம்.. அந்த சமயத்தில் உணர்வுகளுக்கு முதலிடம் குடுத்து உயிர்களை கொன்று புதைக்கும் கொலைகாரர்களாகவே இச்சமூகம் கற்ப்பித்து வருகிறது.இக்கால கல்வியில் “பாலியல் கல்வியை “சேர்ப்பதற்கே அவமானமாக பார்க்கும் இச்சமூகத்தில் தான் அனைத்து பாலியல் குற்றங்களும் நடக்கின்றன.அதுவும் வயது வித்தியாசம் இன்றி ..இது குரல்வளை நெரிக்கப்படும் கணம் என்றே சொல்லலாம்..ஆண் செய்யும் மோசமான தவறுகளை கூட இயல்பாக காட்டும் இவ்வூடகங்கள் பெண் செய்யும் சிறு தவறை கூட பெரிதாக்கி அவள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது..அந்த சூழ்நிலையில் உள்ள பெண்களை அடைய எதிர்பார்க்கும் மோப்ப நாய்களாவே சிலர் இருந்து வருகின்றனர்..வாழும் ஒவ்வொரு நொடியும் தன் உடலை பாதுகாக்க போராடும் பெண்களாக வாழும் நிலையை இக்கேடுக்கெட்ட அரசு வழி நடத்துகிறது.ஆண் சமூகம் எவ்வளவு மோசமான செயல்கள் செய்தாலும் அது பெரிதாக்குவதில்லை…ஆனால் பெண்கள் சந்தேகத்திற்கு உட்பட்டால் கூட அவள் பெயர்………(bitch).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here