தவறு செய்கிறார் ஆளுநர் ஜனாதிபதியிடம் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் முறையீடு சட்டமன்றத்தை உடனே கூட்டுக!

குடியரசுத் தலைவரிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 19 அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆதரவை வாபஸ் பெற்றிருப்பதால் எழுந்துள்ள சட்ட ரீதியிலான குழப்பம் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமனம் செய்யப்பட்ட போது அவரிடம் 15 நாட்களில் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார்.அதன்படி சட்டப்பேரவையில் பிப்ரவரி 18-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் குழப்பம் ஏற்பட்டது. அன்று ஜனநாயகமற்ற முறையில் நடந்த- நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.சட்டப்பிரிவு 163(1)ன் படி முதல்வர் மற்றும் அமைச்சர்களின் உதவி மற்றும் அறிவுரைப்படி ஆளுநர் செயல்பட வழி வகுக்கிறது. சட்டப்பிரிவு 164(4)ன் படி அனைத்து அமைச்சர்களுக்கும் சட்டமன்றப் பணிகளில் கூட்டுப் பொறுப்பு உள்ளது.இந்த நிலையில் 19 எம்எல்ஏ-க்கள் தங்கள் ஆதரவை திரும்பப் பெறுவதாக தனித்தனியாக ஆளுநரிடம் கடித
புதுதில்லி, 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுசட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்து விட்ட சூழலில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது கடமையை ஆற்றுவதிலிருந்து தவறி விட்டதாகவும், அவரது மவுனம் குதிரை பேரத்திற்கு வழி வகுப்பதாக உள்ளது என்றும் திமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள்குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மீது தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர், தமிழகபொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடிதம் அளித்தனர். இதனால், முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை, 132-இல் இருந்து 113 ஆக குறைந்தது. சட்டப்பேரவையில் அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது.
இதுதொடர்பாக, ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கைவாக்கெடுப்பை எதிர்கொள்ள உத்தரவிடு மாறு வலியுறுத்தினார். காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமியும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். ஆளுநரோ அவற்றை பொருட்படுத்தா மல் மும்பை சென்று இருந்து கொண்டார். ஒருவாரத்திற்குப் பின்னரே சென்னை ராஜ் பவனிற்கு வந்தார்.உடனடியாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக,காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், ஆளுநரை நேரில் சந்தித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரினர். அப்போதும் ஆளுநர் மவுனம் கலைப்பதாக இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர்தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் புதனன்று ஆளுநரை சந்தித்தனர். “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்தஆதரவை, டிடிவி தினகரனின் ஆதரவாளர்களாக உள்ள 19எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெற்றுள்ள நிலையில், தற்போது நிலவும் சூழலானது, மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளில் நிலையற்ற தன்மையையும் உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது செயலற்றுக் கிடக்கிறது; மாநிலத்தில் நிலவுகிற இத்தகைய அரசியல் உறுதியற்ற – நிலையற்ற தன்மையை முடிவுக்கு கொண்டு வர சட்டப்பேரவையை உடனே கூட்டுவதற்கும் முதலமைச்சர் தனதுபெரும்பான்மையை நிரூபிப்பதற்கும் ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என்றுஅவர்கள்கோரிக்கை விடுத்தனர்.
இவ்விஷயத்தில் ஆளுநர் காலம் தாழ்த்துவது விரும்பத்தகாத செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும்அவர்கள் எடுத்துரைத்தனர்.ஆனால், ஆதரவு விலக்க கடிதம் கொடுத்துள்ள 19எம்எல்ஏக்களும் அதிமுகவினர் என்ற நிலைதான் தற்போதும் உள்ளதால், சட்டப்படி எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை இழந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது என்று ஆளுநர் கூறிவிட்டார். அதிருப்தி அதிமுக உறுப்பினர்கள் 19 பேருக்கு,அரசு கொறடா புகாரின் பேரில், பேரவைத் தலைவர்நோட்டீஸ் அளித்து விளக்கம்கேட்டுள்ள பின்னணியில், இவர்கள் அதிமுகவில்தான் நீடிக்கிறார்கள் என்று ஆளுநர் கூறியது தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனிடையே, தமிழக ஆளுநரின் ஒருதலை சார்பான நடவடிக்கை தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவதென தமிழக எதிர்க்கட்சிகள் தீர்மானித்தன. அதன்படி திமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் வியாழனன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தனர். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றஇந்த சந்திப்பில், மத்திய முன்னாள் அமைச்சர் ஆனந்த்சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியசெயலாளர் து.
ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது, “தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடிபழனிசாமி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுறுத்தவேண்டும்” என்று தலைவர்கள் மனு அளித்தனர்.அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த், “எந்த மாநிலத்திலும் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடிப்பதுநல்லதல்ல” என்று குறிப்பிட்டதுடன், இந்த விஷயத்தை தாம் கவனிப்பதாகவும்,தமக்கு சற்று கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே தலைவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது,குடியரசுத் தலைவர் தங்களின் முறையீட்டை கேட்டுக் கொண்டதாகவும், அவர் உரியநடவடிக்கை எடுத்து, ஆளுநருக்கு உத்தரவிடுவார் எனஎதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment