பெண்கள் இருந்தால் அமைதி இருக்குமாம் !உரையில் கூறுகிறார் மோடி !

Image result for narendra modi

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.அதில் இந்த வாரத்தில் அவர் கூறியது   
 இந்திய ராணுவ வீரர்கள் நமது எல்லைகளின் பாதுகாப்புக்கு மட்டும் போராடாமல், உலக அமைதிக்காகவும் போராடி வருவதாக பெருமிதம் கொண்டார். மேலும் பேசிய அவர் காஷ்மீரின் குரேஷ் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம் என்றும் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து உலகத்தில் அமைதியை இந்திய ராணுவ வீரர்கள் கொண்டு வருகின்றனர் என்றும் கூறினார். 


அமைதி நடவடிக்கையில் பெண்களுக்கும் முக்கிய பங்களிப்பு உள்ளது என்றும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு மகாகவி பாரதியாரின் பங்களிப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் உலக அமைதிக்காக நமது ராணுவ வீரர்களை உலக நாடுகள் பாராட்டி வருகின்றனர் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.