தூத்துக்குடி துறைமுகத்தில் நிதி மோசடி:கஸ்டம்ஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!!!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து தினமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஏற்றுமதி, இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு “ட்ரா பேக்’ எனப்படும் ஊக்குவிப்பு தொகை வழங்குகிறது. தூத்துக்குடியில் செயல்படும் பிரபலமான ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை பெறுவதற்காக போலியாக ஒரு நிறுவனத்தை பதிவு செய்துகொண்டார். அவர் பணியாற்றும் நிறுவனம் ஏற்றுமதி,இறக்குமதி மேற்கொள்ளும்போதெல்லாம், தமது போலி நிறுவனமும் கோடிக்கணக்கில் சரக்குகளை ஏற்றுமதி செய்ததாக ஆன்லைனில்சுங்கத்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்வார். இதற்காக அந்த நிறுவனத்தின் கம்ப்யூட்ர் பாஸ்வேர்டுகளைஅறிந்து வைத்துள்ளார். இவ்வாறு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரூபாயை மோசடியாக பெற்றுள்ளார். இவரது வளர்ச்சியை அறிந்த வேறு சில ஊழியர்களும் இதே போல மோசடியில் ஈடுபட்டதுநேற்று கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட நபரை சுங்கத்துறையினர்கைது செய்து விசாரிக்கின்றனர்.மேலும் இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருக்க முடியாது என்பதால் பணியில் அசட்டையாக இருந்த ஒரு கண்காணிப்பாளர், 2 இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சுங்கத்துறை வட்டாரங்களில் தெரிவித்தனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment