சொந்த செலவில் குழந்தைகளை காப்பாற்றிய உ.பி., அரசு டாக்டர் அதிரடி நீக்கம்

லக்னோ : உ.பி.,யில் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்துள்ளது.கோரக்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் 66 லட்சம் ரூபாய் வரை நிலுவை தொகை வைத்ததால் தனியார் நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திக் கொண்டது. இந்த விபரீதம் காரணமாக 63 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உ.பி., அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.இந்நிலையில் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் கபீல் கான் என்பவர் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். கபீல் கானை பெற்றோர்கள் பாராட்டி வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை பதவியில் இருந்து நீக்கி பூபேந்தர் சர்மாவை அவரது இடத்தில் நியமித்துள்ளது. இது உ.பி., அரசுக்கு மேலும் நெருக்கடியை அதிகப்படுத்தி உள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment