விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஓவியா நீக்கம்; பார்வதி நாயர் சேர்ப்பு.

விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சீதக்காதி’ படத்திலிருந்து நடிகை ஓவியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பார்வதி நாயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் தற்போது ‘சீதக்காதி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், காயத்ரி, ஓவியாக ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஓவியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பார்வதி நாயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடிகை ஓவியா படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டதால் அவர் நீக்கப்பட்டு விட்டாராம்.
இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது. சீனியர் நடிகை அர்ச்சனா மற்றும் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் திடீர் பிரபலமான ஓவியாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் விஜய் சேதுபதி படத்திலிருந்து ஓவியா நீக்கப்பட்டது பின்னடைவாக கூட இருக்கலாம்.

Leave a Comment