தைவானில் தமிழ் சங்கத்தினர் மாணவி அனிதாவுக்காக நினைவு அஞ்சலி..!

மாணவி அனிதாவின் அகால மறைவுக்கு தைவான் தமிழ் சங்கம்     நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.இதுதொடர்பாக தைவான் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் இரமேஷ் பரமசிவம் அனுப்பிய தகவல்
கடந்த கல்வியாண்டு முதல் இந்திய நடுவண் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீட் எனும் மருத்துவபடிப்பு ஒழுங்குமுறைத் தேர்வினால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போதிய மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவபடிப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ படிப்பு மறுக்கப்பட்ட வேதனையில் தமிழகத்தின் செல்ல மருத்துவமகள் அனிதா கடந்த ஒன்றாம் தேதி தன் இன்னுயிர்தனை நீர்த்தார். 
நீட் தேர்வினை மறுத்து மரித்துப்போன Dr அனிதா அவர்களுக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இத்தேர்வினை தடை செய்யக் கோரி உலக அளவில் அனைத்து பகுதியிலிருந்தும் எதிர்ப்புகளுடன் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment