சளி, இருமலா? இனி கவலை வேண்டாம்!

மழைக்காலம் வந்துவிட்டாலே, பருவ மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் இருமல், சளியின் பிடியில் சிக்கிக்கொள்கிரார்கள். மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமலேயே, விளம்பரங்களில் காட்டப்படும் மாத்திரைகளையும், காஃப் சிரப்களையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இருமல், சளிக்கு இப்படி நாம் பயன்படுத்தும் பிரபல மருந்துகளில் பி.பி.ஏ. என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால், அதைத் தவிர்த்து, இந்த பாட்டி வைத்தியத்தை ஒரு முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது. 
சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 

கொதிக்கும் நீர் 200 மிலி-ஆக வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகி வந்தால் சளி, இருமல் பிடியில் இருந்து சீக்கிரமாக வெளிவரலாம். 
author avatar
Castro Murugan

Leave a Comment