ஜூனியர் என்.டி.ஆர் விஜய் பற்றி இப்படி கூறினாரா??

தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு தமிழ் சினிமா நடிகர்கள் என்றால் பிடிக்கும். தமிழ் சினிமாக்களை விரும்பி பார்ப்பர்.
இந்நிலையில் ஜூனியர் N.T.R நடித்து தற்போது வெளியான ஜெய் லவ குச திரைப்படத்தின் ப்ரோமாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் ஒரு நிருபர் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு அவர் சற்றும் யோசிக்காமல் ரஜினி மற்றும் அஜித் படங்களை விரும்பி பார்ப்பேன் அதன் மூலம் பல அனுபவங்கள் கிடைக்கும் என கூறினார்.
மேலும் விஜயின் நடனம் மிகவும் பிடிக்கும் அதிலும் வசந்த முல்லை பாடல் மிகவும் பிடிக்கும் என கூறினார்.

Leave a Comment