மதுரை மட்டன் வறுவல் செய்வது எப்படி?


தேவையானவை பொருள்கள்:

மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 நறுக்கியது
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 11/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

மட்டனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாகிக் கொள்ளவும். இத்துடன் வெங்காயம், தனியாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு  சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
வேகவைத்த மட்டனைச் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். இத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.
உப்பை சரிபார்த்து கரம் மசாலா தூளைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். இப்போது மணக்கும் மதுரை மட்டன் மசாலா தயார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment