வீடுகளுக்கு குடிநீர் கட் !சுத்தமாக இல்லை என்றால்….

Image result for dengue

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் மக்கள் அனைவரும் உயிர் இழந்து வருகின்றனர்.
இதற்கு காரணமாக கூறப்படுவது  சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பை, ‘கட்’ செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் அதிகாரிகள், வீடு தோறும் அதிரடி ஆய்வை துவக்கி உள்ளனர்.Image result for salem dengue
சேலத்தில், நேற்று, 18 இடங்களில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க, தமிழக அரசு முழு முனைப்புடன், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில், ‘ஏடிஸ்’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலின் தாக்கம், ஐந்து ஆண்டுகளுக்கு பின், மக்களை மிரள வைத்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரத்த பரிசோதனை மையங்களிலும், குவிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், லட்சத்திற்கும் மேற்பட்டோர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 50 பேர் வரை, பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். பகீரத முயற்சி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொது நல அமைப்புகளுடன் இணைந்து, பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, டெங்கு பரவ, நன்னீரில் உருவாகும், ‘ஏடிஸ்’ கொசுக்களே காரணம் என்பதால், அவற்றின் உற்பத்தியை முற்றிலும் ஒழிக்க, நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன.வீடுகள், கடை கள், காலி மனைகள், கட்டுமான பணியிடங்கள், சேமிப்பு கிடங்குகள், திரையரங்குகள், சுங்கச்சாவடிகளில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இது மீண்டும் திடரும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது . 


author avatar
Dinasuvadu desk

Leave a Comment