ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்ற இந்தியா..!

By

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா அணி . இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. 

இந்தியா தரப்பில்  ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே இணை சிறப்பான தொடக்கம் அமைந்தது.பின்னர் வந்த பாண்டியா தனது முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்ததால் இந்தியா அணிக்கு வெற்றி உறுதியானது.இவர்  72 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார்.

இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெறுகிறது.