வீராணம் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு….! அமைச்சர் சம்பத் பங்கேற்ப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியின் 34 மதகுகள் வழியாக 400 கனஅடி நீரை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.
தண்ணீர் திறப்பின் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.