இன்று கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள்…?

இன்று முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள் – (அக்டோபர் 21, 1835) கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் பிறந்த ஊர் திருவாரூர். தமிழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே பக்திமானாக விளங்கினார். சங்கீத மும்மூர்த்திகளில் மற்ற இருவர் பாடிய கீர்த்தனைகள் தெலுங்கில் உள்ளன. முத்துசாமி தீக்சிதரின் கீர்த்தனைகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் உள்ளன. 1835ம் ஆண்டு தீபாவளி நாளன்று காலை பூஜைகள் முடிந்தவுடன் தனது சீடர்களை “மீன லோசனி , பாச லோசனி” என்ற பாடலைப் பாடுமாறு பணித்ததாகவும் அவர்கள் அவ்வாறு பாடும்போதே தீட்சிதர் “சிவ பாஹி” என உரைத்து கண் மூடி சமாதி ஆனார் என அவரது வரலாறு கூறுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment