வரலாற்றில் இன்று(09.05.2020)…. மகாத்மாவின் அரசியல் குரு அவதரித்த தினம் இன்று….

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலே (Gopal Krishna Gokale) பிறந்த தினம் வரலாற்றில்  இன்று (மே 9). அவரைப் பற்றிய சிறந்த நம்மை அறியா தகவல்கள்; கோகலே  மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் (1866) பிறந்தார். இவரது இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், இவரின் அண்ணன் வேலை பார்த்து இவரைப் படிக்கவைத்தார். மின்சாரம் இல்லாததால் தெரு விளக்கில் படித்தார். ஒரே கால் சட்டை … Read more

தமிழக அரசின் கைது நடவடிக்கையை கண்டு அஞ்சாமல் அடுத்த கார்ட்டூனை வெளியீட்ட பாலா…!

தமிழக அரசின் கைது நடவடிக்கையால் தான் சிறிதும் மனம் தளர வில்லை என்றும் அனைத்து மக்கள் மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவோடு எப்போதும்போல் அரசின் தவறுகளை விமரிசித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று சொல்கிற கார்ட்டூனிஸ்ட் பாலா தன்னைப்பற்றியே இந்த கார்ட்டூன் வரைந்துள்ளார். 23-10-17 என் வாழ்வை புரட்டிப்போடப்போகும் நாள் என்பது அப்போது எனக்கு தெரியாது.. அந்த காட்சியை நான் பார்க்காமல் இருந்திருந்தேன் என்றால் இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காது. இதை எழுதும் இந்த நொடி … Read more

வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள்.

வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள். 1914ம் ஆண்டு துவங்கிய இப்போர் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன்மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்டஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. ஜெர்மானியப் … Read more

இன்று – நவம்பர் 11, 2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் நினைவு நாள்

இன்று – நவம்பர் 11, 2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் நினைவு நாள் யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தீரமிகு தலைவராக இருந்தவர். 1994-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் இவரும் ஒருவர். அரபாத் சுயநிர்ணய- பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர். 2004-ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் பெர்சி … Read more

வரலாற்றில் இன்று-இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது

வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1975 – இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது. அது மக்களுக்கு அஞ்சல் சேவை அதிகம் தேவைப்பட்ட காலம். அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளிலும் அஞ்சலகங்களின் பணி நேரம் முடிந்துவிட்ட நேரங்களிலும் இது போன்ற நகரும் அஞ்சலக வேன்கள் கொண்டு நிறுத்தப்பட்டு தபால் தலை விற்பனை, ரெஜிஸ்ட்ரேசன், மணி ஆர்டர் போன்ற அஞ்சல் சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன. அதன் பின்னர் இதர பெருநகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்ட இச்சேவை … Read more

வரலாற்றில் இன்று-ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள்

வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1965 – தென் ஆப்பிரிக்க நாடான தற்போது ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள். ஆப்பிரிக்க மக்களின் புரட்சி வென்று இயான் ஸ்மித் என்ற ஆங்கிலேய பிரதமரின் ஆட்சி கவிழ்ந்தது. ஜிம்பாப்வே தேசிய யூனியன் கட்சித்தலைவர் ராபர்ட் முகாபே தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பின்னர் படிப்படியாக அனைத்து உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. கருப்பு வெள்ளைப் படத்தில் ஜிம்பாப்வே விடுதலைப் … Read more

இன்று சகலகலா வித்தகர் திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் 107 வது பிறந்த தினம்

இன்று சகலகலா வித்தகர் திரு.கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam Subbu) அவர்களின் 107 வது பிறந்த தினம். 10 நவம்பர் 1910 கொத்தமங்கலம் சுப்பு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார். மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதியவர். தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு 1967 ஆம் … Read more

வரலாற்றில் இன்றுதான் தமிழ்நாட்டுடன் இணைக்கபட்டது கன்னியாகுமரி…!

வரலாற்றில் இன்று – நவம்பர் 1, 1956. கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் “குமரித் தந்தை ” என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் … Read more

வரலாற்றில் இன்று – நவம்பர் 1, 1986 தமிழ்நாடு சட்ட மன்றத்தின் மேலவை கலைக்கப்பட்டது

அறிஞர் அண்ணா முதலமைச்சர் பதவி வகித்தபோது,அவரும் சட்ட மன்றத்தின் மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். எம்ஜியார் முதலமைச்சராக இருந்த போது திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு ஆளுனர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் … Read more

வரலாற்றில் இன்று இந்தியாவோடு இணைந்த புதுச்சேரி மாநிலம்….!

வரலாற்றில் இன்று 1954, நவம்பர் 1 புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி புதுச்சேரியில் தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப்பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் புதுச்சேரி பகுதிகளிலும் விடுதலைப் … Read more