தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது – சொந்த கட்சியை தூக்கியடித்த எம்.எல்.ஏ கனகராஜ்…

18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறாது எனவும் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலு கூட அதிமுக வெற்றி பெறுவது கடினம் எனவும் கோவை மாவட்ட சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார். 
தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம்  கடிதம் கொடுத்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 18 பேரை தகுதிநீக்கம் செய்து பேரவைத்தலைவர் ஆணையிட்டார். 
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 20 ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
இதைதொடர்ந்து மூடப்பட்டிருந்த சட்டப்பேரவையை திறந்து சுத்தம் செய்யும் பணியிலும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,  தமிழகத்தில் 18 தொகுதிகள் காலி என தேர்தல் ஆணையத்திற்கு பேரவை செயலாளர் பூபதி கடிதம் அனுப்பியுள்ளார். 
இந்நிலையில், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறாது எனவும் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலு கூட அதிமுக வெற்றி பெறுவது கடினம் எனவும் கோவை மாவட்ட சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார். 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment