மீண்டு(ம்) திரும்பி வரும் தினகரன்

பதினெட்டு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண்போம் என்றார் டி.டி.வி. தினகரன்.
திருச்சியில் செப். 19-இல் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை மாலை தினகரன் காரில் புறப்பட்டார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு தினகரன் அளித்த பேட்டி: 
18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை. 
சட்டப்பேரவையை கூட்டி எடப்பாடி கே. பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 
எங்களுக்கு, மேலும் 10-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே, எடப்பாடி தலைமையிலான அரசு கவிழ்வது உறுதி. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு தமிழக ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார் தினகரன்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment