அணி மாறிய சரத்குமார்:எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!

0
133
முதல்வர் எடப்பாடியுடன் சமக தலைவர் நடிகர் சரத்குமார் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுக அலுவலகம் செல்ல உள்ள நிலையில் முதல்வருடன் சரத்குமார் திடீர் சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியதால், வருமான வரித்துறையின் கடுமையான சோதனைக்கு ஆளான சரத்குமார், பின்னர் அமைதியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு சென்று பேசி வருகிறார். இந்த சந்திப்பில் அரசியல் ரீதியாக பேசப்படும் என கூறப்படுகிறது.
இன்று காலை முதல்வர் அதிமுக தலைமை அலுவலகம் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், சரத்குமாரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here