அதிமுக இரு அணிகளும் ஒன்றிணையும் – அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு !!!

அதிமுக இரு  அணிகளும் , சுதந்திர தினத்துக்குள் ஒன்றிணையும் என்று தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும், டிடிவி.தினகரனுக்கு அதிமுகவில் பதவி கொடுத்ததே செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர தினத்துக்குள் அதிமுக அணிகள் ஒன்றிணையும் என்று கூறியுள்ளார்.

Leave a Comment