வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களை இந்திய வாக்காளர்களாக பதிவு செய்ய ஆர்வம் இல்லையாம்…!

டெல்லி: வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களில் 24 ஆயிரம் பேர் மட்டுமே இந்திய வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கும் வகையில் மத்திய அரசு சில ஏற்பாடுகளைச் செய்தது. அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள இணைய தளத்தின் மூலம் வழிவகை செய்தது. இந்த இணைய தளத்திற்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயரை பதிய விரும்புவோர், தான் வாழும் வெளிநாட்டில் குடியுரிமை பெறாதவராக இருக்க வேண்டும்.
மத்திய அரசின் இந்த வசதியின் மூலம் ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த இணையதளத்திற்குச் சென்று, தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்ட இந்தியர்கள் 24,348 மட்டும் பேர்தான்.
இவர்களில் 23,556 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 364 பேர் என்றும், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து வெறும் 14 பேர்தான் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment