கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை…தொடக்க ஆட்டக்காரர்கள் கிடைக்கவில்லையே…!

லண்டன்: கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி மிகப் பெரிய சோதனையில் உள்ளது. சரியான ஓப்பனர் கிடைக்காமல் திணறி வருகிறது.
1739ம் உருவாக்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணிதான் உலகின் முதல் கிரிக்கெட் அணியாகும். ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, 1877, மார்ச்சில், உலகின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து விளையாடியது.
இதுவரை, 987 டெஸ்ட்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய சோதனையாக, சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் கிடைக்கவில்லை.
சமீபத்தில் நடந்த, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் வென்றாலும், துவக்க ஆட்டக்காரரான அலிஸ்டர் குக்குக்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்க தொடரில், துவக்க ஆட்டக்காரரான ஜென்னிங்க்ஸ், 127 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் அதிகபட்சம், 40 ரன்களாகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, மூன்று டெஸ்ட் போட்டித் தொடரில் இங்கிலாந்து விளையாட உள்ளது. முதல் போட்டி, வரும், 17ம் தேதி இங்கிலாந்தின் பிர்மிங்காம் எட்பாஸ்டனில் துவங்க உள்ளது.

சரியாக விளையாடாததால், லியாம் டாசன்னைப் போல, ஜென்னிங்க்சையும், இங்கிலாந்து அணி கழற்றிவிட்டுள்ளது.
சுர்ரே கவுன்டி அணியின் துவக்க ஆட்டக்காரரான மார்க் ஸ்டோன்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

துர்காம் அணிக்காக விளையாடியுள்ள இடதுகை ஆட்டக்காரரான ஸ்டோன்மேன், நடப்பு கவுன்டி சீசனில், சராசரியாக, 60 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று சதங்களுடன், அதிகபட்சமாக, 197 ரன்கள் எடுத்துள்ளார்.

இவருடனாவது, ஓப்பனர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என, இங்கிலாந்து கிரிக்கெட் தேர்வுக் குழு ஆதங்கத்தில் உள்ளது.
ஸ்டோன்மேனுடன், லெக் ஸ்பின்னர் மாசன் கிரேனும், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆன்டர்சன், ஜானி பிரிஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஸ்டார்ட் பிராட், அலிஸ்டர் குக், மாசன் கிரேன், டாவிட் மாலன், டோபி ரோலாண்ட் ஜோன்ஸ், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், டாம் வெஸ்ட்லி, கிரிஸ் வோக்ஸ்.

Leave a Comment