மன்சூர் அலிகானின் ஆதங்கத்தை அஜித் ஏற்றுக்கொள்வாரா?

அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் பல எழுந்து வந்தபோதிலும் கோலிவுட் திரையுலகினர் அஜித்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். வழக்கம்போல் அஜித் அமைதியாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் அஜித்துக்கு ஆதங்கத்துடன் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர் தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?
மன்சூர் அலிகானின் ஆதங்கத்தை அஜித் ஏற்றுக்கொள்வாரா?

Leave a Comment