மாநில அரசுகள் மீது பழி! பொறுப்பை தட்டி கழிக்கிறாரா பிரதமர் – ராகுல் காந்தி குற்றசாட்டு

வாட் வரி உள்ளிட்ட அனைத்துக்கும் மாநில அரசுகள் மீது பழி சுமத்துகிறார் பிரதமர் என ராகுல்காந்தி ட்வீட்.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று, தமிழகம் தெலுங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. இதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் குடிமக்களை கூடுதல் சிரமத்திற்கு மாநில அரசுகள் ஆளாக்குகின்றன என்றும் கூறியிருந்தார்.

இதற்கு தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்ப்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுல ராகுல் காந்தி, வாட் வரி, நிலக்கரி, ஆக்சிஜன் சிலிநாடார் தட்டுப்பாடு என அனைத்துக்கும் மாநில அரசுகள் மீது பழி சுமத்துகிறார் பிரதமர். எரிபொருள் மீதான 60% வரி மத்திய அரசுக்கு தான் செல்கிறது. இருந்தபோதிலும் பிரதம பொறுப்பை தட்டி கழிக்கிறார் என குற்றசாட்டினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்