இன்று நடைபெறுகிறது பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம்

இன்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம்  நடைபெறுகிறது

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.  இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் காணொலி காட்சி மூலம்  நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பாஜக மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுச்செயலாளர் முரளிதரராவ் உரையாற்றுகின்றனர்.