பாஜக ஆளும் மாநிலங்களில் மதவெறி அரசியலை மக்கள் மீது தூண்டிவிடுகின்றனர்-டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளேன். எனக்கு வந்த தகவல் படி வேலூர் தேர்தலில் மதசார்பற்ற கட்சி வெற்றி பெறும் என்ற கருத்து வருகிறது. தேர்தல் சுதந்திரமாக நடைபெற வேண்டும்.

அதேபோல் தேர்தல் ஆணையமும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடுநிலையான முறையில் செய்லபட வேண்டும். ஆனால் சமீப காலமாக தேர்தல் ஆணையம் அவ்வாறாக செய்லபடவில்லை.

பிரதமரும் நிதியமைச்சரும் சேர்ந்து கார்ப்பரேட் பயனடையும் வகையில் பட்ஜெட் அறிவித்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.தொழிலாளர் விரோத கொள்கைகளை கொண்டுவருகின்றனர்.

உபியில் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். மேலும் பெண்கள் மீது வன்கொடுமைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிற சூழலில் பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் அதிகளவில் நடத்தப்பட்டு, மதவெறி அரசியலை மக்கள் மீது தூண்டிவிடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட்டு வலுவோடு செயல்பட்டு. நாட்டை நல்ல முறையில் வழிநடத்த வேண்டும். அதுமட்டுமின்றி வரும் காலங்களில் இதற்கென மற்ற கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.