நாளை டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்…!

தலைநகர் டெல்லியில் நாளை காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தலைநகர் டெல்லியில் நாளை காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் காணொளி வாயிலாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.