முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு!

வழிபாட்டு தலம் பிரச்சனை குறித்து முதலமைச்சரிடம் பேசியுள்ளோம் என பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்துள்ளனர். தொகுதி சார்ந்த பிரச்னைகள் மற்றும் மாநிலத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து மனு அளித்ததாக தகவல் கூறப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், மத பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணம் ஒரு வழிபாட்டுத்தலத்தின் அருகில், வேறு வழிபாட்டுத்தலம் அமைப்பதுதான், எதிர்காலத்தில் ஒரு வழிபாட்டுத்தலம் அமைக்க வேண்டுமானால் எதிர்ப்பற்ற நிலை இருக்க வேண்டும் என தெரிவித்தார். வழிபாட்டு தலம் மற்றும் தொகுதி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சரிடம் பேசியுள்ளோம் என்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment