4 மாநில வாக்கு எண்ணிக்கை.. 2 மாநிலங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக ..!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மாநிலங்களில் இரண்டில் பாஜக முன்னிலையிலும், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. அதன்படி 199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி பாரதிய ஜனதா 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ஆளும் கட்சியான காங்கிரஸ் 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில்  பாஜக – 57 இடங்களில் முன்னிலையிலும் , காங்கிரஸ் – 17 இடங்களில் முன்னணியில் உள்ளன.

மத்தியப்பிரதேசம்  230 தொகுதிகள் உள்ளது.

பாஜக – 57 இடங்களில் முன்னணியில் உள்ளன .
காங்கிரஸ் – 17 இடங்களில் முன்னணியில் உள்ளன .
மற்றவை – 1 இடங்களில் முன்னணியில் உள்ளன .

ராஜஸ்தானில் உள்ள  199 தொகுதிகள் உள்ளது.

பாஜக – 71 இடங்களில் முன்னணியில் உள்ளன .
காங்கிரஸ் – 46 இடங்களில் முன்னிலையில் முன்னணியில் உள்ளன .
மற்றவை – 10 இடங்களில் முன்னிலையில் முன்னணியில் உள்ளன .

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் 116 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதையடுத்து கமல்நாத் முதல்வரானார். இருப்பினும், 2020 இல் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan