பாஜக முதல்வர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தோல்வி..!

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது உத்தரகாண்டில் பாஜக ஆட்சி அமையுமா..? அல்லது காங்கிரஸ் வெற்றி பெறுமா..? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.

வாக்கு தொடங்கிய சில மணி நேரத்தில் உத்தரகாண்டில் பாஜக பெருமான்மையான இடங்களில் முன்னிலை வகித்தது. இதனால், அனைவரின் கண்களும் உத்தரகாண்ட் மாநிலத்தின் காதிமா தொகுதி மீது சென்றது. காரணம் முதல்வர் வேட்பாளராக களமிறங்கப்பட்ட புஷ்கர் சிங் தாமி அந்த தொகுதியில் தான் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்தாலும், காதிமா தொகுதியில் பாஜக வேட்பாளரும், முதல்வருமான புஷ்கர் சிங் தாமி தோல்வியை தழுவியுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமி தோல்வி அடைந்தார். 

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிக்கைபடி, உத்தரகாண்ட்டில் மொத்தமுள்ள 70 தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி 43 இடங்களில் முன்னிலை பெற்று 5 இடங்களில் தற்போது வரை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 15 இடங்களில் முன்னிலை பெற்று 3 இடங்களில் தற்போது வரை வெற்றி பெற்றுள்ளது.

author avatar
murugan