தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்..! குழம்பிய தொண்டர்கள்

BJP: மக்களவை தேர்தலுக்கான தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் திருநெல்வேலியில் போட்டியிடுகிறார் என பாஜக தலைமை மாற்றியுள்ளது.

Read More – சென்னையில் பாஸ்பரஸ் வெடித்து +2 மாணவன் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.

Read More – தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் : கோவையில் அண்ணாமலை… சென்னையில் தமிழிசை…

அதன்படி, 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி தொகுதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டது பாஜகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால், சிறிது நேரத்தில் பாஜக வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு புதிய பட்டியல் வெளியானது. இதில், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அ.தி.மு.கவில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.