BigBreaking:வாடகைக் கார்கள்,ஆட்டோக்கள் இயங்க அனுமதி….!

ஜூன் 7 ஆம் தேதி முதல் வாடகைக் கார்கள்,ஆட்டோக்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் படி,

  • ஜூன் 7 ஆம் தேதி முதல் வாடகைக் கார்கள்,ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.மேலும்,வாடகை டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும்,ஆட்டோக்களில்,ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.