BIGBOSS:2 வீட்டில் ரீல் ஜூலி மற்றும் ரியல் ஜூலி..??என்ன நடக்க போகிறது BIGBOSS 2வில்..!!

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜுன் மாதத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த முறை போன்றே இம்முறையும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
BIGGBOSS2 இல்லத்திற்கு ஜுலி மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் வருகை தந்துள்ளனர். அதற்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Image result for biggboss2 promo harish tamil images
இந்நிலையில் இன்று நிகழ்ச்சிக்குழுவினர் 2 புரமோ வீடியோக்களை இதுவரை வெளியிட்டுள்ளனர். அதில் முதலாவதாக வெளியான வீடியோவில், நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்திருப்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் இப்போதிருக்கும் சூழலில் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்திருப்பது அவர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகும் பியார் பிரேமா காதல் படத்தின் விளம்பரத்திற்காகவே என்று தெரிய வருகிறது.
Image result for biggboss2 promo tamil images
இதையடுத்து வெளியாகி இருக்கும் வீடியோவில், நடிகை மும்தாஜ் வைஷ்ணவியின் செயல்பாடுகளை விவரிக்கிறார்.
அப்போது ஜூலி செய்த காரியத்தை மும்தாஜ் நினைவூட்ட வைஷ்ணவி என்னை எல்லோரும் ஜூலி என்று சொல்லி விட்டீர்கள் என்று ஆதங்கப்படுகிறார். இதன்மூலம் ஜூலி என்ற கதாபாத்திரம் முதன்முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் அறிமுகமாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment