தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகள் – இதை தவிர்த்து விடுங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இருமல் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி சிரப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், இருமல் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட மருந்தை தயாரித்த நிறுவனத்திடம் தமிழ்நாடு மருந்துவ சேவைகள் கழகம் எந்த மருந்துகளையும் வாங்குவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment