மீண்டும் ஹிந்தி அழிப்பு போராட்டம்! குடியாத்தம் ரயில் நிலையத்தில் 22 பேர் அதிரடி கைது!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் கொண்டாடப்பட்ட ஹிந்தி தினத்தன்று இந்தியா பன்முகம் கொண்ட நாடுதான். இருப்பினும் ஒரே நாடு ஒரே மொழி கலாச்சாரம் இருக்க வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும். என கூறினார். இந்த கூற்று நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தென் மாநிலங்களில் இந்த கருத்து கண்டத்திற்குட்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதி திமுக தொழில்நுட்ப குழு தலைவர் ஞானபிரகாஷ் தலைமையில் திமுகவினர் குடியாத்தம் ரயில்நிலையத்தில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களை அளித்து, மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து கோஷமிட்டனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.