இன்று முதல் ஜன.18 ஆம் தேதி வரை…அனுமதி இல்லை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,இன்று முதல் (14-01-2022) முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில்,கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பரவி வரும் உருமாறிய கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய் தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.அதன்படி கூடுதல் கட்டுப்பாடுகள்,

  • இன்று முதல் (14-01-2022) முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
  • 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.
  • பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • தற்போது, ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.