ஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார்! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

ஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார்.

By leena | Published: Jul 07, 2020 05:57 PM

ஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் பகுதியில் கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுவரும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முககவசம் மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், முழு ஊரடங்கில் மக்கள் கொடுத்த ஒத்துழைப்பை போலவே தளர்வுகளுடன் கூடிய முடக்கத்திலும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், முறையான ஆதாரத்துடன் இ- பாஸ் விண்ணப்பித்தால் அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ஆ.ராசா விடுத்துள்ள அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையில் இருந்த ராசா, சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை குறித்து பேசுகிறார் என்றும், பாரத் நெட் திட்டத்தில் ஊழல் ஏதுமில்லை, நன்றாக படித்த அ.ராசா, ஞானம் உள்ள அ.ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார் என மக்கள் கேட்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc