மலச்சிக்கலை குணப்படுத்த கூடிய 5 பாட்டி வைத்தியங்கள் இதோ..!

காலையில் எழுந்ததுமே நமது வயிற்றுடன் போராட வேண்டி இருக்கும். காலை கடனை முடிப்பதற்குள் மோசமான நிலையை நாம் அடைந்து விடுவோம். இப்படி தான் உங்களின் ஒவ்வொரு நாளும் செல்கிறதென்றால் உங்களுக்கான தீர்வை தருவதற்கே இந்த பதிவு.

தினமும் நீங்கள் கஷ்டப்படும் மலச்சிக்கலை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்தி விடலாம். இவை பல வருடங்களாக நம் பாட்டி வைத்தியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறைகளை இனி அறிந்து கொள்வோம்.

பாலும் நெய்யும்
மலச்சிக்கலை குணப்படுத்தும் மிக எளிமையான வழி உள்ளது. அதாவது 1 கப் சூடான பாலில் 1 ஸ்பூன் பசு நெய்யை கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடு படலாம். இதை தான் ஆயுர்வேதத்தில் பயன்படுத்துவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அத்தி
மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை தர அத்தி பழம் உதவுகிறது. இவற்றில் அதிக அளவில் உள்ள நார்சத்து தான் இதன் தன்மைக்கு மூல காரணமாம். உலர்ந்த அத்திப்பழத்தை வெண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

திரிபலா
மூலிகைகளின் ராஜாவாக திகழ்வது இந்த திரிபலா. உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கும் திரிபலா தீர்வை தரும். கால் ஸ்பூன் திரிபலா பொடியை எடுத்து கொண்டு டீ போன்று தயாரித்து குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடப்படலாம்.

பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகத்தை லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும். அதன் பின் 1 கிளாஸ் வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இந்த நீரை தூங்க போகும் முன் குடித்து வந்தால் காலையில் சீரான முறையில் மலம் கழிக்க இயலும். மேலும், இது வாயு தொல்லைக்கு தீர்வை தரும்.

அதிமதுரம்
வாசனை பொருட்களில் ஒன்றாகவும், பல மூலிகை தன்மைகளை கொண்டதுமான அதிமதுரத்தை மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வாக பயன்படுத்தலாம். இதற்கு முதலில் 1 ஸ்பூன் வெல்லத்தை 1 கப் மிதமான நீரில் கலந்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் 1 ஸ்பூன் அதிமதுர பொடியை கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

Leave a Comment