மக்களே கவனம்..’வெப்பநிலை’ படிப்படியாக உயரும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

heat wave

தமிழகத்தில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பநிலை இன்று முதல் வரும் 18 -ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.  14, 15, 16 ஆகிய தேதிகளில் வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் … Read more

இல்லாத மரியாதையை தேடாதீர்கள்…இயக்குனர் செல்வராகவனின் இன்றைய தத்துவம்..!!

selvaraghavan

இயக்குனர் செல்வராகவன் எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், அவ்வபோது டிவிட்டரில் ரசிகர்களுக்கு தத்துவத்தை கூறி வருகிறார். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டரில்  ” அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை ” என பதிவிட்டிருந்தார். இல்லாத மரியாதையை தேடாதீர்கள் ???????? — selvaraghavan (@selvaraghavan) May 14, 2023 … Read more

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

mk stalin

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆறுதல் தெரிவித்ததோடு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் … Read more

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி- கமல்..? வெளியான சூப்பர் தகவல்.!!

Maamannan Grand Audio Launch

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ்  அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில்  உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் … Read more

3 மணிக்கு மேல் ட்வீட் செய்வதை நிறுத்துங்கள்…எலான் மஸ்க்-ஐ கலாய்த்த ட்விட்டர் சிஇஓ லிண்டா.!!

Elon Musk and LindaYaccarino

உலக பணக்காரர்களில் மிக முக்கிய நபரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து யாரும் எதிர்பார்த்திராத ப்ளூ டிக் கட்டணம், ஆள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் புதிய தலைமை டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை அதிகாரி (CEO) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் இன்னும் 6 வாரத்தில் பணியை தொடர்வார் எனவும் , அவர் டிவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் … Read more

கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன்…எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!!

Edappadi K. Palaniswami

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால்  சுரேஷ்,சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 13 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  டிவிட்டரில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துவிட்டு கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிவிட்டரில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி … Read more

புற்றுநோய் விழிப்புணர்வு…புதிய ஜெர்சிக்கு மறிய ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணி.!!

Gujarat Titans

புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘குஜராத் டைட்டன்ஸ்’  அணி தனது ஜெர்சி கலரை மாற்றியுள்ளது.  நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்  குஜராத் டைட்டன்ஸ் (நாளை) திங்களன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இன் கடைசி ஹோம் லீக் ஆட்டத்தில் லாவெண்டர் ஜெர்சியை அணிந்து விளையாடுகிறது. இதற்கான ஜெர்சியை தங்கள் வீரர்கள் அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி “புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த விழிப்புணர்வை … Read more

அடடா…குட் நியூஸ் சொன்ன “விருமாண்டி” அபிராமி…குவியும் வாழ்த்துக்கள்.!!

abhirami

அன்னையர் தினத்தில் நடிகை அபிராமி நற் செய்தி ஒன்றை அறிவித்துள்ளார்.  விருமாண்டி திரைப்படத்தில் அன்னக்கிளி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் பவன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை அபிராமி, அவரும் கணவர் ராகுலும் பெற்றோர் ஆனதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ‘கல்கி’ என்ற பெண் குழந்தையை தத்து எடுத்ததாகவும் … Read more

எச்சரிக்கை…இன்று கரையை கடக்கிறது ‘மோக்கா’ புயல்…4 நாட்களுக்கு மழை நீடிக்கும்.!!

Mocha Cyclone Rain

வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர மோக்கா புயலானது இன்று தென்கிழக்கு வங்கதேசம்  வடக்கு மியான்மர் பகுதியில் கரையை கடக்கிறது.  மோக்கா புயல் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர மோக்கா புயலானது அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், இன்று மோக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம்  … Read more

அம்மாக்களின் அன்பால் இயங்கிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்… எம்.பி.கனிமொழி டிவிட்.!!

kanimozhi and karunanidhi

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பலரும் தங்களுடைய அம்மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் அவருடைய தந்தை கருணாநிதி மற்றும் அம்மா ராஜாத்தி அம்மாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது ” அம்மாக்களின் அளவிட முடியாத அன்பாலும், … Read more